Wednesday, August 10, 2011

விதி


இந்த உலகில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் இதெல்லாம் விதி என்று சொல்கிறார்கள். நடந்த அந்த ஒரு நிகழ்வுக்கு காரணம் என்று ஒன்று உள்ள போது அதை பொத்தம் பொதுவாக விதி என்று எப்படி சொல்ல முடியும் .உதாரணமாக ஒருவன் பேருந்தில் மோதி இறந்து விடுகிறான் எனில் அந்த விபத்திற்கு ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும் .ஒரு வேளை அவன் அதி வேகமாக வந்திருக்கலாம் அல்லது எதிரே வந்த பேருந்து அதி வேகமாக வந்திருக்கலாம். இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும் போது அதை விதி என்றோ அல்லது கடவுளின் செயல் என்றோ கூறுவது எவ்வளவு பெரிய அறியாமை .

சில பேர் சொல்வது என்னவென்றால் "நடந்ததையே நினைத்து வருத்தபடுவதை விட விதி என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை தொடருவோம்" என்பது தான். அடுதத வேலையை தொடருவதில் தவறில்லை ஆனால் நடந்தது விதி அல்ல .அவர்கள் செய்த ஒரு தவறினால் அல்லது மற்றவர்கள் செய்த தவறினால் அவர்களுக்கு அது நிகழ்ந்து விட்டது என வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம்.

சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பட்ட பகலில் ஒரு சிக்னல் அருகில் ஒருவரை குடி போதையில் நான்கு பேர் அடித்து கொன்று போட்டாங்க . அதை பார்த்த ஒருவர் கூட அவர்கள் அடித்ததை தடுக்கவில்லை.அப்படி யாராவது தடுத்திருந்தால் அவர் காப்பாற்றபட்டிருப்பார் .அவர்கள் அடித்ததை யாருமே தடுக்கவில்லை என்பதே விதி என்று சிலர் சொல்ல கூடும். அதை தடுக்க எவன் ஒருவனுக்கும் தைரியம் இல்லை என்பதுதான் உண்மை . தனி ஒருவன் கூட வேண்டாம் அங்கு நின்ற 30 (தோராயமாக) பேரும் சேர்ந்தாவது தடுத்திருக்கலாமே.
விதி என்று ஒன்றும் இல்லை .எல்லாமே நம் கையில் தான் உள்ளது .எல்லாரும் தடுத்திருந்தால் ஒரு ஏழை தொழிலாளியின் உயிர் போயிருக்காது.

விதி என்று சொல்பவர்களால் நடக்கும் எல்லாவற்றையும் விதி என்றே சொல்லி சமாளிக்க முடியும் .நான் இது போல் எழுதுவது கூட விதி என்று சொல்லக்கூடும்.

"விதி என்று சொல்வது "ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வு" என்றல்லவா ஆகி விடுகிறது .இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எதேச்சையாகவும் , எதோ ஒரு காரணத்தோடும் தான் நடக்கிறது".

என்னை பொறுத்தவரை " எந்த ஒரு செயலுக்கும் காரணம் என்று ஒன்று உள்ளவரை விதி என்று சொல்ல முடியாது "




No comments:

Post a Comment